கேலக்ஸி ஏ30: விலைகுறைப்பு! எதை வாங்கலாம்?

Samsung Galaxy A30 now sells for Rs 13,990 in India, should you buy it or go for Redmi Note 7 Pro?

by SAM ASIR, Jun 15, 2019, 09:33 AM IST

சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ30, ரூ.16,990 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு விலை குறைக்கப்பட்டு ரூ.15,490க்கு விற்பனையானது. மீண்டும் ரூ.1,500 குறைக்கப்பட்டு தற்போது 13,990 ரூபாயாக விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே ரூ.13,990க்கு சாம்சங் கேலக்ஸி ஏ30 கிடைக்கும்.

அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் இ-ஸ்டோர் போன்ற இணையவழி விற்பனையில் விலைகுறைப்பு அறிமுகம் செய்யப்படவில்லை. அங்கு 15,490 ரூபாயாகவே கேலக்ஸி ஏ30 போனின் விலை உள்ளது.

விற்பனை விலையாக ரூ.13,990 நிர்ணயிக்கப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ30 மற்றும் ரூ.13,999 விலையில் விற்பனையாகிவரும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகிய இரண்டுமே 15,000 ரூபாய்க்கு கீழே கிடைக்கும் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன்களாகும்.

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

AMOLED தொடுதிரை, விளம்பரத்தை அனுமதிக்காக மென்பொருள், நல்ல தற்பட (செல்ஃபி) காமிரா

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
ஸ்நாப்டிராகன் பிராசஸர், 48 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா, Glass உடலம்

ஒப்பீடு:

நீங்கள் கேம் பிரியரானால், திரைப்படங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களை முழு மூச்சாய் பார்ப்பவரென்றால் AMOLED திரை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ30 வாங்கலாம். ஏனெனில் ரெட்மி நோட் 7 ப்ரோ, எல்சிடி திரை கொண்டது. மின்தேக்கத்தை பொறுத்தவரை இரண்டுமே நல்ல பேட்டரி கொண்டவை. தோற்றத்தை பொறுத்த வரை, பிளாஸ்டிக் உடலம் கொண்ட சாம்சங்கை விட, ரெட்மி நல்ல தோற்றம் கொண்டது.
விளம்பரங்களை அனுமதிக்கும் ரெட்மி நோட் 7 ப்ரோவின் MIUI மென்பொருளைக் காட்டிலும், விளம்பரங்களை அனுமதிக்காத சிறந்த மென்பொருளை சாம்சங் கொண்டுள்ளது. ஆகவே, சாம்சங் கேலக்ஸி ஏ30 சிறந்த தெரிவாக இருக்கும்.

3 மணி நேரத்துக்கு மேல் தாஜ்மகாலில் சுற்றினால் கூடுதல் கட்டணம்..! அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை..!

You'r reading கேலக்ஸி ஏ30: விலைகுறைப்பு! எதை வாங்கலாம்? Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை