விவோவின் யூத்புல் ஒய்20ஏ ஸ்மார்ட்போன்: ஜனவரி 2 முதல் விற்பனை...!

by SAM ASIR, Dec 31, 2020, 09:32 AM IST

மூவி ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் இவற்றுக்கான யூத்புல் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒய்20ஏ ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வரும் ஜனவரி 2ம் தேதி முதல் இது ஆன்லைனிலும் முக்கியமான அங்காடிகளில் நேரடியாகவும் விற்பனையாகும். 5000 mAh திறனும் 10W சார்ஜிங் தொழில்நுட்பமும் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மூலம் உயர்தர பதிவான திரைப்படங்களை (HD movie) 17 மணி நேரம் பார்க்கவும் 10 மணி நேரம் தீவிரமான கேமிங்கில் ஈடுபடவும் ஏற்றது.

விவோ ஒய்20ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை : 6.51 அங்குலம்; ஹாலோ ஐவியூ திரை; 20.9 விகிதாச்சாரம்
யக்கவேகம்: 3 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி
பிராசஸர் : குவல்காம் ஸ்நாப்டிராகன் 439
முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி (போகேஷ்) + 2 எம்பி (மாக்ரோ) டிரிபிள் காமிரா
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ஃபன்டச் ஓஎஸ் 11
விலை : ரூ.11,490/-

More Technology News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை