ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் சடலமாக மீட்கப்பட்டான் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குழந்தை சுஜித் மறைவுக்கு மிகவும் வருந்துகிறேன். சுஜித்தின் பெற்றோர், உறவினர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் போதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆழ்துளை கிணறு தொடர்பான வழிமுறைகள் ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று மாவட்டக் கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் கவனக்குறைவு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று சுஜித் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.