உலகம் முழுவதும் எப்பொழுது தடுப்பூசி கிடைக்கும்?? ஏழை நாடு vs பணக்கார நாடு..

Advertisement

கடந்த 10 மாத காலமாக உலகம் முழுவதும் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நமது சுகாதாரத்துறை பல இன்னல்கள், தோல்விகளை சமாளித்து இறுதியில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. தற்பொழுது கொரோனா பதற்றம் போய் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வருகிறது. பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு மனிதர்களிடம் காட்டப்படுவது இயல்பு. ஆனால் அதே பாகுபாடு நாடுகளில் மேல் காண்பிக்கப்படுவது நியாமா?? வாங்க இதை பற்றி விரிவாக பார்க்கலாம். அதிக வருவாய் கிடைக்கின்ற நாட்டை பணக்கார நாடாகவும், வருவாயில் பின்தங்கிய நாட்டை ஏழை நாடாகவும் குறிக்கின்றனர். தற்பொழுது நிலவரப்படி 49 நாடுகளுக்கு 3.90 கோடிக்கு மேல் தடுப்பூசிகளும் ஏழை நாடுகளுக்கு 25க்கும் குறைவான மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுக்கும் தேவையான தடுப்பூசி தக்க சமயத்தில் கொண்டு சேர்க்க சுகாதாரத்துறை நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒரு வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.

பணக்கார நாடுகளில் தேவைக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு அது மக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியை பேரம் பேசுவதற்க்கே நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கே மக்களுக்கு கொண்டு சேர்ப்பது?? ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசி தான் உலகம் முழுவதும் விநியோகச் செய்யப்படுகிறது. ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரில் வைத்து பதப்படுத்தினால் மட்டுமே 30 நாளைக்கு தடுப்பூசி கெடாமல் இருக்கும்.இதனை பதப்படுத்த பல ஆயிரம் குளிர் பெட்டிகள் தேவைப்படும். இந்த முறை பணக்கார நாடுகளுக்கு கைகொடுக்கும் ஆனால் ஏழை நாடுகளின் கதி என்ன?? மாடர்னா தடுப்பூசியை நமது வீட்டில் இருக்கும் குளிரூட்டியிலே பதப்படுத்தலாம். ஆனால் இதலையும் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஃபைசர் தடுப்பூசியின் விலையை விட இது பல மடங்கு அதிகமானது. தடுப்பூசியை பணம் கொடுத்து வாங்குவது ஒரு சில நாடுகளுக்கு கனவாகவே இருந்துவிடும் போல..

இது வரைக்கும் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் பெரிய நாடுகளால் வாங்கப்பட்டுள்ளது. மிஞ்சி உள்ள ஏனைய நாடுகள் என்ன செய்யும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. சில நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் எந்த வித ஒப்பந்தமும் போடவில்லை. இதனால் எங்கே தடுப்பூசி கிடைக்காமல் போகிவிடுமோ என்ற அச்சம் பலரது மனதை உலுக்கி வருகிறது. சுகாதார அமைப்பின் நோக்கம் என்ன வென்றால் எல்லா நாடுகளுக்கும் தேவையான தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதே.. இதனால் கோவாக்ஸ் என்ற திட்டத்தை பிறப்பித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு தடுப்பூசிக்காக 2.4 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜனவரி மாதம் இறுதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 2 பில்லியன் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று திட்டமிட்டது. ஆனால் அப்படி சரியாக வழங்கினாலும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி கிடைக்குமா என்பது கேள்வி குறிதான். அதிக வருமானமுள்ள நாடுகள் கோவக்ஸ் திட்டத்தைத் தவிர்த்து நேரடியாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்ததை மேற்கொண்டுள்ளது.

இதனால் அர்ஜெண்டினா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி போன்ற ஏழை நாடுகள், மிக விலை குறைவாக தயாரிக்கப்படுகின்ற ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசியை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியா சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கின்ற தடுப்பூசிக்கு ஜனவரி 3 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டு நிறுவனத்தின் தடுப்பூசிகளும் கடைசி நிலை சோதனையில் உள்ளது. ஆபிப்ரிக்காவுக்கு 170 டோஸ் தடுப்பூசிகளும் மொத்தமாக கிடைக்க சீரம் இன்ஸ்டிடியூட் பக்க பலமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஜூன் மாதத்திற்குள் 50 மில்லியன் டோஸ் கொடுக்க எல்லா முயற்சியும் எடுத்து வருகிறது. இந்நிலையில் சீனா நாடும் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியின் விலை மற்ற நாடுகளை விட விலை மலிவாக கிடைப்பதால் லத்தின், அமெரிக்கா, ஆபிப்ரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் சீனாவை நோக்கி படையெடுத்துள்ளது.

இந்நிலையில் சினோஃபார்ம் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் சுமார் 1 பில்லியன் மருந்துகளை தயாரிக்கும் என்று உறுதி அளித்ததால் அரபு ஐக்கிய நாடுகள், பக்ரைன், எகிப்து, பாகிஸ்தான் மற்றும் மொராக்கோ போன்ற நாடுகள் இந்நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. தடுப்பூசி தயாரிப்பதில் சீனாவின் இரண்டாவது நிறுவனமான சினோவிக்கிடம் துருக்கி மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் போட்டுள்ளது. கூடிய விரைவில் பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளும் கைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத்தில் கொரோனவிற்க்கு தடுப்பூசி கண்டு பிடித்த முதல் நாடு ரஷ்யா தான். கண்டுபிடித்த தடுப்பூசிக்கு அந்நாடு ஸ்புட்னிக் வி என்று பெயரிடப்பட்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்தியது. இது ஹீடரோ ட்ரக்ஸ் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் இருந்தது. இப்படியே ஒவ்வொரு நாடும் தங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைத்தால் போதும் என்ற வழியில் செயல்பட்டால் கொரோனாவுக்கு விடிவு காலமே பொறக்காது.

சுகாதார நிறுவனத்தின் திட்டம் ஒரு பக்கம் செல்ல தனி நாடுகளின் ஒப்பந்தம் ஒரு பக்கம் செல்ல தடுப்பூசிக்கு பற்றாக்குறை தான் நாளுக்கு நாள் வளருமே தவிர இப்பிரச்சனைக்கு ஒரு நிலையான தீர்வே இல்லாமல் போய்விடும். இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் வேகம் காட்டினால் மட்டுமே உலகம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை தீரும். அதுமட்டும் இல்லாமல் தடுப்பூசி வழங்க சரியான வழிமுறை பிறப்பிக்க வேண்டியது அவசியம். ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் எப்படியாவது 300 மில்லியன் தடுப்பூசி தயாரித்தால் மட்டுமே கொஞ்சமாவது இந்த நிலையை சரி செய்ய முடியும். ஆனாலும் இந்த 300 பில்லியன் மருந்துகள் கால்வாசி மக்களுக்கே மட்டுமே சென்றடையும். தடுப்பூசி கண்டு பிடிக்கும் வேளையில் கொரோனா பல வழிகளில் உருமாற்றம் பெற்று பல விளைவுகளை உண்டாக்கி மக்களை இன்னும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசி கிடைக்க 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் அதார் பூனவல்லா ஆராய்ச்சி மூலம் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :

/body>