மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?

தன்னலமற்ற சேவை, அசாதாரண பங்களிப்பு, விதிவிலக்கான தைரியம் இதுதான் தீயணைப்பு வீரர்களின் தாரக மந்திரம். ஈரமும், வீரமும் நிறைந்த தீயணைப்பு வீரர்கயின் தியாகத்தை உணர்த்தும் வகையில் மே 4 சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


1999 ஆண்டு ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயைக் அணைக்க முற்பட்டப்போது, 5 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் வகையில் மே 4 ஆம் தேதி சர்வதேச தீயணைப்புப் படையினர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் எல்லைப்பகுதியில் ராணுவப் படை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு நாட்டிற்குள் தீயணைப்பு படை முக்கியம். உயிர், உடைமைகளை பஸ்மமாக்கும் தீ விபத்து, உயிரை உறிஞ்சும் விஷ வாயு தாக்குதல், கட்டடங்களை விழுங்கும் பூகம்பம், ஊரையே சுற்றிப்போடும் வெள்ளம் என எந்த இயற்கை பேரிடரானாலும் இவர்களின் பணி அளப்பரியது. தங்கள் உயிரை துச்சமாக மதித்து பிற உயிரைக் காக்கும் தன்னலமற்ற இவர்களுக்கு, வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் பெரிய உடைகள், ஷூ, கையுறை, தலைக்கவசம் ஆகியவைதான் தற்காப்பு கருவி. தொலைபேசியில் 101 எண்ணை டயல் செய்த அடுத்த கனமே, 101 கிலோ மீட்டர் வேகத்தில் சைரன் ஓசையை எழுப்பியப்படியே சம்பவ இடத்திற்கு விரையும் சிகப்பு நிற வண்டி.

தீயணைப்பு வாகனங்கள் பொதுவாக சிகப்பு நிறத்தில் இருக்க காரணம் தீ மற்றும் ஆபத்து என்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது. இந்த வாகனத்திற்குள் 25 வகையான மீட்புக்கருவிகள் இருக்கும், அசம்பாவித சம்பவத்தை பொறுத்து இவர்களின் மீட்பு யுக்தியும், உபகரணங்களும் மாறுபடும். குறுகிய தெருக்கள் முதல், உயர்ந்த கட்டடங்கள் வரை தீயை அணைப்பதற்கு வெவ்வெறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தங்கள் உயிரை பணயம் வைத்துப் பிற உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றும் வீரமும், ஈரமும் நிறைந்த இவர்களின் உன்னத பணியை இந்நாளில் நினைவுகூர்வோம்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!