Aug 18, 2019, 10:09 AM IST
காஞ்சிபுரத்தில் 48 நாட்களாக நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற்றது. நேற்று நள்ளிரவில் அனந்த சரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் சயன கோலத்தில் அத்தி வரதரை வைக்கும் நிகழ்வுடன் வைபவம் நிறைவு பெற்றது. 40 ஆண்டுகள் அனந்த சரஸ் குளத்தில் சயன நிலையில் இருக்கும் அத்தி வரதர் மீண்டும் 2059 -ம் ஆண்டில் தான் காட்சியளிப்பார். Read More
Aug 17, 2019, 14:01 PM IST
காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் அத்திவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர். கோயில் உண்டியல் மூலமாக ரூ.7 கோடி காணிக்கை கிடைத்துள்ளது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். Read More
Aug 16, 2019, 12:51 PM IST
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Aug 15, 2019, 21:45 PM IST
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 15, 2019, 21:28 PM IST
அத்திவரதர் தரிசனம் 17ம் தேதி முடியும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டுமென்று கோரி ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடப்பட்டுள்ளது. Read More
Aug 14, 2019, 13:00 PM IST
அத்திவரதர் இன்று பிங்க் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நாளையுடன் வி.ஐ.பி. தரிசனம் முடிவுக்கு வருகிறது. வரும் 17ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார். Read More
Aug 14, 2019, 12:23 PM IST
காஞ்சிபுரத்திற்கு நேற்று நள்ளிரவில் தனது மனைவி லதாவுடன் வருகை தந்த ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசித்தார். அத்திவரதர் தரிசனம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார். Read More
Aug 3, 2019, 16:08 PM IST
அத்திவரதர் இன்று பச்சை மற்றும் பிங்க் நிற பட்டுடுத்தி காட்சி தருகிறார். தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அத்திவரதரை தரிசித்தனர். Read More
Aug 1, 2019, 09:38 AM IST
இதுவரை சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதப் பெருமாளை தரிசித்து வருகின்றனர். Read More