ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்

minister sengottaiyan wrongly named boy child as jayalaitha

by Suganya P, Apr 3, 2019, 19:06 PM IST

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பிரச்சாரத்தின் போது ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் சூட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அதன் வகையில், திருப்பூர் தொகுதி வேட்பாளரான  எம்.எஸ்.எம் ஆனந்தனுக்கு ஆதரவாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் – பிரியா என்ற தம்பதியரின் பத்து மாதக்  குழந்தைக்குப் பெயர் சூட்ட வேண்டும் என அமைச்சரிடம் குழந்தையை கொடுத்தனர். குழந்தையை வாங்கிய அமைச்சர் ‘ஜெயலலிதா’ எனப் பெயர் சூட்டினார்.  இதைச் சற்றும் எதிர்பார்க்காத பெற்றோர், அமைச்சரிடம் ஆண் குழந்தை என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிரித்துக் கொண்டே அமைச்சர் அக்குழந்தைக்கு ‘ராமச்சந்திரன்’ எனப் பெயர் சூட்டினார். குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறியாமல் அமைச்சர் பெயரிட்டது,  அங்கிருந்த மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது. 

You'r reading ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையன் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை