தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் அளவை குறைத்தது மத்திய அரசு!

by Madhavan, Apr 13, 2021, 19:31 PM IST

தமிழகத்துக்கு உரிய மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் தற்போது பெற்று வருகின்றனர். இந்த மண்ணெண்ணெய் நம்பிதான் அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் இருக்கிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது மேலும் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட மண்ணெண்ணை அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20% மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவின் படி அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது

மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து நியாயவிலை கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது .

You'r reading தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் அளவை குறைத்தது மத்திய அரசு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை