புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டிருப்பது கடைசி நேரக் கபட நாடகம். பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்றிரவு நீக்கப்பட்டார். தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் அந்த பொறுப்பு கூடுதலாகத் தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி நேற்று இரவு விதிக்கப்பட்ட இதைக் காங்கிரஸ் கட்சியினர் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர்.
புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார்.
ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து வரும் 8 ந்தேதி முதல் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாப்போராட்டம் நடத்தப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்தோ பிற மாநிலங்களில் இருந்தோ யாரும் புதுச்சேரிக்கு வரவேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதே வேளையில் , புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தார்.
விவசாயிகள் வேளாண்துறை இணையத்தளத்தை அதிக அளவில் பயன்படுத்த தமிழில் தகவல் இருக்கும் வகையில் வடிவமைக்கப் புதுவை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். தகவல்களை விவசாயிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கவும் ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் அரசு சார்பில் வெளியிட வேண்டிய அடுத்த ஆண்டுக்கான டைரிகள், காலண்டர்களை அச்சிடுவதற்காக ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் வேண்டி கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.
புதுவையில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று அதை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பேடி உத்ததிர்விட்டுள்ளார். புதுவை காவல்துறையில் . கடந்த 2018-ம் ஆண்டு காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.