bjp-canditates-tentative-list-in-tamilnadu-election-surfaces-in-social-media

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 38 தொகுதிகளா? உலா வரும் உத்தேச பட்டியல்..

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறி, ஒரு உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Jan 4, 2021, 13:13 PM IST

dmdk-demands-41-seats-in-admk-alliance

41 தொகுதி கொடுத்தால் கூட்டணி.. அதிமுகவுக்கு தேமுதிக நிபந்தனை..

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வேண்டுமானால், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

Dec 14, 2020, 09:18 AM IST

is-bjp-admk-alliance-continues-in-bypolls

அதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? இடைத்தேர்தல் தடுமாற்றங்கள்..

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது.

Oct 1, 2019, 12:31 PM IST

PM-Modis-ooth-taking-ceremony-admk-alliance-leaders-participate-mk-Stalin-flown-Andhra

பிரதமர் பதவியேற்பு ; அதிமுக பட்டாளம் டெல்லிக்கு படையெடுப்பு... மு.க.ஸ்டாலின் ஆந்திரா பறந்தார்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார்.

May 30, 2019, 12:14 PM IST

Large-scale-criticission-about-admk-alliance-leaders-in-social-medias

அரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது

May 24, 2019, 13:27 PM IST


Manikandan-resigns-from-party-criticises-alliance-with-admk

அதிமுக கூட்டணியை காரித் துப்புறாங்க... பாமக துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகிய மணிகண்டன் விளாசல்

பாமகவில் இருந்து மற்றொரு விக்கெட்டாக மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக பொங்கலூர் இரா.மணிகண்டன் அறிவித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு மக்கள் காரித்துப்புவதாக மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Apr 10, 2019, 12:54 PM IST

edappadi-Palani-Samy-seeking-vote-admk-alliance-via-cell-phone-recording-speech

ஜெயலலிதா பாணியில்....செல்போனிலும் ஒலிக்கத் தொடங்கி விட்டது எடப்பாடியார் குரல்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் ஜெயலலிதா பேசுகிறேன்... என்று செல்போனில் பேசி தமிழக மக்களின் காதுகளை குளிர்விக்கச் செய்தார் ஜெயலலிதா. இந்த நூதன முறை பிரச்சாரம் அப்போது வெகுவாகக் கவர்ந்தது.

Apr 3, 2019, 10:44 AM IST

Premalatha-comments-dmdk-alliance-admk

அதிமுக 4 எழுத்து ... தேமுதிக 4 எழுத்து... கிடைத்ததும் 4 தொகுதிகள் -பிரேமலதா வர்ணனை

அதிமுக தலைமையிலான கூட்டணி ராசியான கூட்டணி என்றும் வெற்றிக் கூட்டணி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமையாக கூறியுள்ளார்.

Mar 25, 2019, 22:32 PM IST

admk-alliance-seat-allotment-list-released

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு.. பாமக, தேமுதிக திடீர் புறக்கணிப்பால் குழப்பமோ குழப்பம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியீட்டின் போது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் யாரும் பங்கேற்காததால் கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தகவல்கள் வெளியாகி கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Mar 17, 2019, 12:58 PM IST

admk-alliance-seat-allotment-list-release-today

அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி ஒதுக்கீடு பட்டியல் - பாஜக, பாமக தொகுதிகள் கடைசி நேரத்தில் மாற்றம்

அதிமுக கூட்டணியில் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. ஏற்கனவே முடிவு செய்த பட்டியலில் பாமக, பாஜக கட்சிகளுக்கு உறுதி செய்யப்பட்ட தொகுதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Mar 17, 2019, 08:02 AM IST