கார்கிலில் உயிர்விட்ட தந்தை: ராணுவ அதிகாரியாகி அஞ்சலி செலுத்திய மகன்

by Rahini A, Jun 12, 2018, 21:47 PM IST

ஹித்தேஷ் குமாரின் தந்தை லான்ஸ் நாய்க் பச்சன் சிங், கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழ்ந்தார்.

அப்போது ஹித்தேஷுக்கு வெறும் 6 வயது தான். தற்போது அவருக்கு 24 வயது. தன் தந்தை எந்தப் படைப்பரிவில் ராணுவ வீரராக இருந்தாரோ அதே பிரிவில் ராணுவ அதிகாரியாக சேர்ந்துள்ளார் ஹித்தேஷ்.

சுமார் 19 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஹித்தேஷ், `என் தந்தை தான் சிறு வயது முதலே எனது உத்வேகம். அவரைப் போலவே ஆக வேண்டும் என்று கனவு கண்டேன். அதை இப்போது சாதித்து முடித்துள்ளேன்' என்றார் பெருமையாக.

இந்திய ராணுவ அகாடமியிலிருந்து கடந்த 9 ஆம் தேதி தேர்வு பெற்றார் ஹித்தேஷ். அவரது தந்தை பச்சன் சிங் ஏறக்குறைய 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் 13 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ஹித்தேஷ் தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உத்தரப் பிரதேச முசாஃபர்நகருக்கு ராணுவ சீருடையுடன் வந்தார். 

You'r reading கார்கிலில் உயிர்விட்ட தந்தை: ராணுவ அதிகாரியாகி அஞ்சலி செலுத்திய மகன் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை