ஹிட் வரிசையில் இணையும் 5வது படம்... சூர்யாவுக்காக மாஸ் கதை எழுதும் பிரபல இயக்குநர்

by Sakthi, May 2, 2019, 19:20 PM IST

சூர்யா ரசிகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரே குஷியில் இருந்தனர். காரணம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த சூர்யாவின் படங்கள் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகியது.

சூர்யா

சூர்யா ரசிகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரே குஷியில் இருந்தனர். காரணம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த சூர்யாவின் படங்கள் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகியது.

ஏப்ரல் 5ஆம் தேதி சூர்யா தயாரிப்பில் விஜயகுமார் இயக்கத்தில் உறியடி 2 படம் வெளியானது. `இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் சூர்யாவின் 38வது படத்தின் பூஜை ஏப்ரல் 7ஆம் தேதியும், படப்பிடிப்பு ஏப்ரல் 8ஆம் தேதியும் நடந்தது.. தற்பொழுது அப்படத்தின் படப்பிடிப்பில் தான் இருக்கிறார் சூர்யா. அடுத்ததாக ஏப்ரல் 12ஆம் தேதி மாலை செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் தண்டல்காரன் என்கிற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்தநாளே, சூர்யாவின் 38வது படமான சுதாகொங்கரா இயக்கிவரும் படத்துக்கு சூரரைப் போற்று என்கிற டைட்டில் அறிவிக்கப்பட்டது. பின், ஏப்ரல் 14ஆம் தேதி கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் பட டீஸர் வெளியானது. ஏப்ரல் 22ஆம் தேதி மாலை சூர்யாவின் 39வது படத்தின் அறிவிப்பு வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூர்யா நடிப்பில் மே மாதம் இறுதியில் ‘என்.ஜி.கே’ படமும், ஆகஸ்ட் மாச கடைசியில் ‘காப்பான்’ படமும் வெளியாகவிருக்கிறது. இப்படியாக ஏப்ரல் மாதம் முழுவதும் சூர்யாவின் அப்டேட்கள் கொட்டியது.

பாண்டிராஜன்

இந்த மாத துவத்திலேயே சூர்யா பற்றிய புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இயக்குநர் பாண்டிராஜிடம் ரசிகர் ஒருவர் `சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாண்டிராஜ், சூர்யாவுக்காக செம கதை ஒன்றை எழுதி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கதையில், மாஸ் காட்டும் ஹீரோவாக சூர்யா இருப்பாராம். காமெடி, குடும்ப செண்டிமெண்ட் என கமர்சியல் படமாக அது இருக்குமாம். கதைகளம் கிராமத்து பின்னணியில் ரெடியாகி வருகிறதாம் . இதை கேட்ட சூர்யாவின் ரசிகர்கள் டபுள் சந்தோஷத்தில் இருக்கின்றனர். காரணம் ஏற்கெனவே நான்கு ஹிட் படங்கள் வரிசையாக வர உள்ளது. இதில் ஐந்தாவதாக மற்றுமொரு ஹிட்டும் ரெடியாகி வருகிறது என்னும் குஷியில் உள்ளனர்.

துணிச்சலாக இருங்கள் பெண்களே..இதெல்லாம் நடக்கும் - நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த சமீரா ரெட்டி


More Cinema News