கின்னஸ் சாதனை படைத்த பிரபல இயக்குநர், நடிகை விஜய நிர்மலா மறைந்தார்

Famous lady film director and actress Vijay Nirmala passed away

by Nagaraj, Jun 27, 2019, 12:24 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்தும் அதிக படங்களை இயக்கிய பெண் என்ற கின்னஸ் சாதனையும் படைத்த பிரபல நடிகை விஜயநிர்மலா காலமானார்.

73 வயதான விஜய நிர்மலா சென்னையில் பிறந்தவர். 7 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் கால் பதித்த விஜய நிர்மலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவர், தமிழில் 'பணமா பாசமா' படத்தில் 'எலந்தப்பழம்' பாடல் மூலம் பிரபலமானவர்.எம்.ஜி.ஆரின் 'என் அண்ணன்' படத்தில் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்து பெயர் பெற்றார்.

நடிகையாக மட்டுமின்றி திரைப்பட இயக்குநராகவும் தெலுங்கு பட உலகில் புகழ் பெற்றவர் விஜய நிர்மலா. மொத்தம் 44 படங்களை இயக்கியுள்ளார் விஜயநிர்மலார் இதன் மூலம் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநராக 2002-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

தெலுங்கில் பிரபல கதாநாயகனாக கொடிகட்டிப் பறந்த நடிகர் கிருஷ்ணாவை 2-வதாக மணந்து கொண்டார். இவரது முதல் கணவர் மூலம் பிறந்த மகன் நரேஷூம் தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு ஐதராபாத் காண்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய நிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா முதல் கே.சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தப்பு தப்பா பேசக்கூடாது.. நானும் பல விஷயங்களை பேசுவேன்...! தினகரனை எச்சரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

You'r reading கின்னஸ் சாதனை படைத்த பிரபல இயக்குநர், நடிகை விஜய நிர்மலா மறைந்தார் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை