விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி

Vijaysethupathi compete with Vijay in Diwali Race

by Mari S, Aug 26, 2019, 08:39 AM IST

தீபாவளி பண்டிகைக்கு விஜய்யின் பிகில் படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு வெளிவருகிறதாம்.

சங்கத்தமிழன் படத்தில் இடம்பெற்றுள்ள கமலா கலாசா லிரிக் வீடியோ நேற்று வெளியானது. இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையில் உருவாகியுள்ள குத்து பாடலுக்கு சாண்டி நடனம் அமைத்துள்ளார். விஜய்சேதுபதி மற்றும் ராஷி கண்ணா நடனமாடுகின்றனர்.

இந்த பாடல் வெளியான சற்று நேரத்திலேயே படத் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ், தீபாவளி கொண்டாட்டமாக சங்கத்தமிழன் ரிலீசாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக விஜய்சேதுபதியின் சங்கத் தமிழன் களமிறங்குகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வாலு, ஸ்கெட்ச் படங்கள் அடைந்த தோல்வியை மாற்றி அவருக்கு வெற்றியை கொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் எங்க அண்ணன் பாடல் வெளியீடு!

You'r reading விஜய்யுடன் மோதும் விஜய்சேதுபதி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை