பிகில் டீசர் ரிலீஸ் இல்லை – ஆனா அதுக்கு மேல வெறித்தனம் காத்துட்டு இருக்கு!

by Mari S, Sep 7, 2019, 18:34 PM IST
Share Tweet Whatsapp

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தின் டீசர் வரும் 19ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது டீசர் வெளியாகாது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படம் வரும் தீபாவளி சரவெடியாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான சிங்கபெண்ணே மற்றும் விஜய்யின் குரலில் வெளியான வெறித்தனம் பாடல்கள் யூடியூபில் பல சாதனைகளை படைத்து வருகின்றன.

ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று வெறித்தனம் அட்டகாசம் செய்து வருகிறது.

வரும் 19ம் தேதி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் டீசர் ரிலீஸ் பிரம்மாண்ட விழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் டீசர் வெளியாகாது என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கு பதிலாக விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக படத்தின் டிரைலரே வெளியிட அர்ச்சனா கல்பாத்தி முடிவு செய்துள்ளாராம்.

அடுத்த மாதம் படம் வெளியாகவுள்ளதால், நேரடியாக டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.


Leave a reply