கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை சமந்தா டிவி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவரடம் அந்தரங்க கேள்வி கேட்கப்பட்டது. அப்போது படுக்கை அறை ரகசியம் பற்றி சமந்தா கூறும்போது,' என் கணவர் சைதன்யாவுக்கு முதல் மனைவி தலையணைதான்.
தலையணை அருகில் வைத்துக் கொள்ளாமல் அவர் தூங்குவதில்லை. இதற்கு மேல் பெட்ரூம் ரகசியத்தை் கூற முடியாது. இதுவே அதிகம் என்று நழுவினர் சமந்தா.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் நாயின் கழுத்தில், 'நெம்பர் 1 ஹஸ்பண்ட்' (முதல் கணவர்) என்று எழுதிய பேட்ச் அணிவிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு சைதன்யாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.
சமந்தாவை வறுத்தெடுக்கும் அவர்கள்,'பொது வெளியில் கணவரை பற்றி மரியாதையாக பேச கற்றுக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் தந்திருக்கின்றனர்.