விஜய்யின் பிகிலுக்கு தெலுங்கிலும் பிரச்னை... கதையை திருடிவிட்டதாக இயக்குனர் புகாரால் பரபரப்பு...

விஜய் நடிக்க அட்லி இயக்கியுள்ள பிகில் படம் தீபாவளியை யொட்டி 25ம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் பிகில் கதை என்னுடையது என்று துணை இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து நீதிமன்றும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளது. இந்நிலையில் தெலுங்கிலும் பிரச்னை எழுந்துள்ளது.பிகில் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாக உள்ளது. குறும்பட இயக்குனர் ஒருவர் விசில் (பிகில்) தன்னுடைய கதை என்று புகார் அளித்து உள்ளார்.

ஸ்லம் ஸோகர் (slum soccer) என்ற தெலுங்கு குறும்படத்தை இயக்கிய நந்தி சின்னி ரெட்டி என்பவர் தெலுங்கு சினிமா எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ள புகாரில் விசில் தனது குறும்படத்தின் கதை என தெரிவித்திருப்பதுடன் இதுகுறித்து வழக்கு தொடருமாறு கேட்டு உள்ளார்.

READ MORE ABOUT :