தளபதி விஜய் பிகில் காஸ்டியூம் விற்பனையால் சர்ச்சை... பிரச்னை கிளப்பிய நபருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..
Bigil Dress Issue
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பிகில் படம் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது அப்படத்தில் காவி வேட்டி, கறுப்பு சட்டை, உத்திராட்ச மாலையில் சிலுவை சின்னம் என விஜய் அணிந்திருக்கும் காஸ்டியும் பர்ஸ்லுக் வெளியானபோதே சர்ச்சையானது. தற்போது பிகில் உடை என்கிற பெயரில் அந்த காஸ்டியும் செட் விற்பனைக்கு வந்திருக்கிறது. காவி வேட்டி கறுப்பு சட்டை மற்றும் சிலுவையும் சேர்த்து விற்பனைக்கு இருக்கிறது.
இதையடுத்து ஒருவர், கடைகளில் பிகில் உடை : நடிகர் 'ஜோசப் விஜய்' தனது பல 'இந்து ரசிகர்களை' மதம் மாற்றம் செய்ய 'மிஷனரி' குழுவிலிருந்து பெரிய தொகை பெற்றிருக்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன ஜி.? என்று எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகியோரிடம் டிவிட்டர் மூலம் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள எஸ்.வி.சேகர்,'இதை பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா. விஜய் வீபூதி பூசி நடிக்கும்போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும்போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா.
Unity in diversity. WE CELEBRATE THIS. என எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.
You'r reading தளபதி விஜய் பிகில் காஸ்டியூம் விற்பனையால் சர்ச்சை... பிரச்னை கிளப்பிய நபருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News