கமல் இல்லாமல் மருதநாயகம்... ரசிகர்களை அதிர வைத்த உலகநாயகன் அறிவிப்பு..

by Chandru, Oct 26, 2019, 10:06 AM IST

உலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் விரும்பி நடிக்கயிருந்த படம் மருதநாயகம். 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசெபத், அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இப்படத்திற்கான தொடக்க விழா நடத்தினார்.

மருதநாயகம் வேடத்தில் கமல் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. பட்ஜெட் கருதி படம் நிறுத்தப்பட்டது. ஆனாலும் கோடிக்கணக்கான செலவில் அரை மணி நேர காட்சிகளை கமல் படமாக்கியிருக்கிறார். வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் இப்படத்தை தயாரிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதையடுத்து படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், மருதநாயகம் படம் எப்போது வெளிவரும் என்று கமலிடம் கேட்டதற்கு அதிர்ச்சியான பதில் அளித்திருக்கிறார்.

அவர் கூறும்போது,'மருதநாயகம் படத்தை நிச்சயமாக திரையில் பார்ப்பீர்கள். ஆனால் கமல்ஹாசன் இல்லாமல் வேறு நடிகர் நடித்திருப்பார். நான் வைத்திருந்த கனவுகளை யெல்லாம் இனி வேறு நடிகர்களை நடிக்க வைத்து நிறைவேற்றுவேன் தொடர்ந்து என்னுடைய ராஜ்கமல் கம்பெனி இயங்கும். என் அரசியல் பயணத்தை பாதிக்காத வகையிலான படங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருப்பதால் அதில் கவனம் செலுத்து வதற்காக இப்போதிலிருந்தே படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கிறார் கமல். இதனால் நடிப்புக்கு அவர் முழுக்குபோடுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. கமலின் இந்த பேட்டி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் முக்கிய காட்சிகளை போபாலில் ஷங்கர் படமாக்கி வருகிறார்.


Speed News

 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST
 • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

  கொரோனா பரவியது..

  நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

  May 20, 2020, 13:42 PM IST
 • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

  1325 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

  May 20, 2020, 13:37 PM IST