ஆணவ படுகொலை பட இயக்குனருக்கு அஜீத் வாழ்த்தா? பதறியடித்து மறுப்பு தெரிவித்த டைரக்டர்..

by Chandru, Jan 14, 2020, 23:26 PM IST
Share Tweet Whatsapp

ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது 'திரௌபதி. மோகன் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு இயக்குனர் மோகனுக்கு நடிகர் அஜீத் போன் செய்து பாராட்டியதாக தகவல் பரவியது. அத்துடன் அஜீத்துடன் இயக்குனர் நிற்கும் புகைப்படமும் வெளியானது.. அதைக் கண்டு அதிர்ச்சியான இயக்குனர் மோகன் தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருறார்.

அதில் கூறும்போது ,'அஜித் எனக்கு போனும் செய்யவில்லை. திரௌபதி படத்திற்காக வாழ்த்தும் சொல்லவில்லை அஜீத்துடன் நான் இருக்கும் புகைப்படம் 5 வருடத்துக்கு முன்பு ஒரு ரசிகனாக அஜீத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம்' என தெரிவித்திருக்கிறார்.


Leave a reply