மணிரத்னம் பற்றி ராதிகா பரபரப்பு பேச்சு.. ஐஸ்வர்யாராய்க்கு பதில் என்னைதான் நடிக்க வைத்திருப்பார்..

by Chandru, Jan 24, 2020, 20:58 PM IST

மணிரத்னம் தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இதில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டின், ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா, சாந்தனு நடிக்கின்றனர். பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாவதுடன் மொத்த பாடல்களும் பாடியிருக்கிறார். இதன் ஆடியோ நேற்று சென்னையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடலையும் சித் ஸ்ரீராம் மேடையில் தோன்றி பாடி அசத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ராதிகா பேசும்போது,'முதலில் சரத்குமார்தான் கதை கேட்பார். வானம் கொட்டட்டும் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது கேள் என்றார். கேட்டேன் வித்தியாச மாக இருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். நானும், சரத்சாரும் இதில் மீண்டும் இணைந்து நடிக்கி றோம். மணிரத்னம் படத்தில் ஏற்கனவே நடித்திருக் கிறேன். ஒரு படத்தில் என்னை பரத நாட்டிய டான்ஸராக நடிக்க வைத்தார். அதன்பிறகு அவர் பட்டபாடு சொல்லி மாளமுடியாது. என்னை பரதநாட்டியம்ஆட வைப்பதற்குள் அவருக்கு வியர்த்துக்கொட்டிவிட்டது. அப்போதுபட்ட கஷ்டத்தை இன்றைக்கும் அவர் அனுபவித்து வருகிறார் (சிரிப்பு). தனது படத்தில் அவர் ஐஸ்வர்யாராய்க்கு பதில் என்னைத்தான் நடிக்க வைப்பார். ஆனால் அவரை விட 2 இன்ச் நான் குறைவாக இருப்பதால் நடிக்க வைப்பதில்லை. பொன்னியின் செல்வனிலும் என்னை நடிக்க வைக்காததுபற்றி கேட்ட போது ஐஸ்வர்யா ராய்க்கும் உனக்கும் இரண்டு இஞ்ச் வித்தியாசமிருக்கிறது எனக் கூறினார்.
இவ்வாறு ராதிகா கலகலப்பாக பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.


More Cinema News