ஏர்போட்டில் ஆடியோ வெளியிடும் சூர்யா சூரரைப் போற்று கதை அப்படியாம்..

by Chandru, Feb 10, 2020, 16:59 PM IST

வாழ்க்கை சரித்திர படங்கள் அவ்வப்போது உருவாகிறது. அந்த வரிசையில் வித்தியாசமான வாழ்க்கை சரித்திரத்தை மையமாக வைத்து உருவாகிறது சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று படம்.  

ஏர் டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  சூரரைப் போற்று கதை உருவாகியிருக்கிறது.  சுதா கொங்கரா இயக்குகிறார். ஏற்கனவே மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை அசத்தலாக தந்ததால் இவர் மீது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இதுவரை ஆடியோ ரிலீஸ் சினிமா தியேட்டர் அல்லது வர்த்தக மால்களில் நடந்துக்கொண்டிருந்தது. சூரரைப்போற்று படத்துக்கு வித்தியசமான ஐடியாவை அமல்படுத்துகிறார் இயக்குனர். விமான நிறுவனம் நிறுவியவரின் கதை என்பதால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. விழாவில் பங்கேற்க வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்.


Leave a reply