கமல்ஹாசன் ரூ 1கோடி உதவி.. இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிப்பு..

by Chandru, Feb 21, 2020, 16:01 PM IST

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் 3 பேர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு நேற்று மாலை கமல்ஹாசன் வந்தார். அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்குத் திரண்டிருந்த பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது கமல்ஹாசன் கூறியதாவது: இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் நான் நூலிழையில் உயிர் தப்பினேன். இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்த விபத்தாகத்தான் கருதுகிறேன். கடைநிலை ஊழியனுக்குப் பாதுகாப்பு தர முடியாத நிலையில் திரைத்துறை இருப்பதை எண்ணி அவமானப்படுகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இது உயிர்ச் சேதத்துக்கான பரிகாரம் அல்ல. அவர்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு கமல் கூறினார்.

அதேபோல் இந்தியன் 2பட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் ரூ 2 கோடி தரவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.


Leave a reply