மாஸ்டர் ஆடியோ ரிலீஸுக்கு எகிறும் எதிர்பார்ப்பு.. பரபரக்கப்போகும் விஜய் பேச்சு...

by Chandru, Mar 4, 2020, 19:27 PM IST

படம் தொடங்கினதுதான் தெரியும் அதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சிபோயிடுச்சா என்கிற அளவுக்கு மிக வேகமாக நடந்து முடிந்திருக்கிறது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு.

இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங், பின்னணி இசை, எடிட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மாஸ்டர் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப் படத்தை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மெசேஜில் ' 129 நாட்கள் இடைவிடாமல் வேலை செய்தோம். இந்த பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. என் மீது நம்பிக்கை வைத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி. என்னுடைய டீம் இல்லாமல் இது சாத்தியமில்லை, படக் குழுவினரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார். லோகேஷின் பதிவுக்கு ஏகத்துக்கு லைக் குவிந்திருக்கும் நிலையில் கதாசிரியர்களில் ஒருவரான ரத்னகுமார், 'வேற லெவலுங்க நீங்க. அப்படியே அந்த மாஸ்டர் ஆடியோ அப்டேட்' என்று மீண்டும் ஒரு அப்டேட் கேட்டு உசுப்பிவிட்டார்.
ரத்னகுமாரின் பதிவுக்குப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் சாந்தனு பதில் அளித்தார். 'பங்காளி அப்டேட் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு நீங்களே கேட்கலாமா? தளபதியன்ஸ் எல்லாருக்கும் நீங்கதான் எடுத்து சொல்லணும்' என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.
வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக இன்னும் 2 வாரத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நடக்க உள்ளது.
ஆடியோ விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவிருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது வருமான வரி துறையினர் விஜய்க்குத் தொல்லை கொடுத்த நிலையில் ஆடியோ நிகழ்ச்சியில் அதுகுறித்து விஜய் என்ன பேசி தாக்குதல் நடத்தப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


Leave a reply