இந்தியன் 2 விபத்து: படப்பிடிப்பு எப்போது? தேர்தல் அறிவித்தால் கமல் ஜூட் விடுவார்..

by Chandru, Mar 9, 2020, 09:36 AM IST

இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. இரவு நேரப் படப்பிடிப்பின்போது கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து கமல்ஹாசன், ஷங்கர், தயாரிப்பாளர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. இதனால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களிடம் வாங்கி வைத்திருந்த கால்ஷீட் தேதிகள் முடிந்துவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க புதிதாக அவர்களிடம் கால்ஷீட் பெற வேண்டி உள்ளது. அதன்பிறகே படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விபத்தை நேரில் பார்த்துப் பயந்துபோயிருக்கும் கதாநாயகி காஜல் அகர்வால் பதற்றம் தணியும் வரை படப்பிடிப்புக்கு வரமாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.

மேலும் படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாகக் கமல்ஹாசன், ஷங்கர், தயாரிப்பு நிறுவனத்துக்கு மோதல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்டதைவிட அதிகமாகச் செலவு செய்யக் கூடாது என்று ஷங்கருக்கு கண்டிஷன் போடப்படடிருக் கிறது. இதற்கிடையில் பட விபத்துக்குத் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று லைகாவுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார். அதற்கு லைகா நிறுவனம், இயக்குநரும், ஹீரோவும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பதில் கடிதம் அனுப்பியது. இப்பிரச்சினைகள் எவ்வளவு காலம் தொடரும் என்று தெரிய வில்லை. .ஏற்கனவே கால்ஷீட் தேதி முடிந்துவிட்டதால் மீண்டும் அவர்களிடம் புதிதாக கால்ஷீட் பெற்று அதை முறைப்படுத்திய பிறகே முழுமையான படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்தியன் 2 திட்டமிட்ட காலத்தில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

You'r reading இந்தியன் 2 விபத்து: படப்பிடிப்பு எப்போது? தேர்தல் அறிவித்தால் கமல் ஜூட் விடுவார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை