ஹர ஹர மஹாதேவகி கவிஞரின் விசித்திர அசுரா..

lyricisit karunanithi wrote poem about corona vairus

by Chandru, Apr 23, 2020, 16:12 PM IST

நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் இளையராஜாவின் அழகி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சொற்கோ கருணாநிதி. இவர் 'மொட்ட சிவா கெட்ட சிவா - படத்தில் ஹர ஹர மகாதேவகி..' பாடல் எழுதி உள்ளார். தற்போது விசித்திர அசுரா என்ற தலைப்பில் கொரோனா கவிதை எழுதி உள்ளார்.

அது வருமாறு : விசித்திர அசுரா--

விஷ பாட்டில் கடைகளை மூடவைத்தாய்
வீடுபேறு அனைவரையும் தேட வைத்தாய்

விபத்தில்லாச் சாலைகளைத் தொடங்க வைத்தாய்
விண் முட்ட நின்றவனை அடங்க வைத்தாய்

விமானத்தில் வேதனையாய் நீ குதித்தாய்
வித்தியாச விதிகளினை நீ விதித்தாய்

ஆட்டி வைத்த - கூட்டத்தைப் போய் மிதித்தாய்
அப்பாவி மக்களைப் போய் ஏன் சிதைத்தாய்

சுத்தமே அத்தனை முக்கியம் என்பதைச் சப்தமின்றி உரைத்தாய்
சூரனே வீரனே என்கிற பெயர்களைத் தாறுமாறாய்க் கிழித்தாய்

நிரம்பியே வழிந்திடும் நெரிசலே இல்லாத நிம்மதியைப் படைத்தாய்
கரும்புகைக் கக்கிய காற்றினை நீக்கிய காட்சியினை வடித்தாய்

கோயில் மசூதியில் ஆலய கடவுளர்க்குக் கொஞ்சம் நாள் ஓய்வு கொடுத்தாய்
கும்பிடும் கடவுளை மருத்துவர் காவலர் ஏவலரில் குழுவிலே நீ படைத்தாய்

சிவனா மெதினா சிசுபாலா வடிவினை வீட்டினிலே நீ வடித்தாய்
கொரானா என்கிற எமனா அசுரனே நீ வெளியிடத்தை பிடித்தாய்

You'r reading ஹர ஹர மஹாதேவகி கவிஞரின் விசித்திர அசுரா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை