நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கமிஷனரிடம் புகார்.. அவதூறு பரப்பும் வலைத்தள பதிவை நீக்குங்கள்..

actor Vijay sethupathi complained to the police commissioner

by Chandru, May 10, 2020, 12:35 PM IST

பிரபல நடிகர் விஜய் சேதுபதி பற்றிக் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் அவதூறான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதனை இணையதளத்திலிருந்து நீக்க உத்தரவிட வேண்டுமென்று போலீஸ் கமிஷனருக்கு விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

அகில இந்திய விஜய் சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஐ.குமரன் சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:ஐ.குமரன் ஆகிய நான் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருக்கின்றேன். நடிகர் விஜய்சேதுபதி ஒரு ஆண்டுக்கு முன் 17. 3. 2019 அன்று சன் டிவி தொலைக் காட்சியில், நம்ம ஊரு ஹீரோஎன்ற நிகழ்ச்சி ல் மறைந்த கதாசிரியரும் நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறு பதிவு செய்தார். இப்படி யதார்த்தமாகச் சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்று சொன்ன பொருள் தன்மையிலிருந்து மாற்றி இந்துக்களுக்கு எதிராக விஜய் சேதுபதி சொந்த கருத்தாகத் திரித்து அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இந்த வதந்தியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் வலைத்தளங்களில் ஒரு பெரும் சர்ச்சையே நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில் தர்மத்தைப் பாதுகாக்கும் காவலர்களைப்போல் வாதிடுபவர்கள் தார்மீக தர்ம முறைகளை மீறி விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றித் தரக்குறைவாகவும் தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள்.

இது விஜய் சேதுபதியின் நற்பெயரைக் குறைப்பதோடு தேவையில்லாத வலைத்தள வாக்கு வாதங்கள், சமூக நல்லிணக்கத்தையும் அமைதியைச் சீர்குலைக்கும் ஒரு தூண்டு கோலாக உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம் தனிமனித கருத்துக்கள் வேறுபட்டிருந்தாலும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் தனி மனிதனின் சுயமரியாதையைப் பாதிக்கும் விதமாக இருக்கக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது காட்சியாகவும் காயப்படுத்தும்.

அதனால் உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய தரக்குறைவான அருவருக்கத்தக்க உள்ள பதிவுகளை அகற்றவும் இத்தகைய பதிவுகள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படிப்பட்ட அடிப்படை சர்ச்சைக்குரிய அந்த காணொளியும் நீக்கப்பட வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

You'r reading நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கமிஷனரிடம் புகார்.. அவதூறு பரப்பும் வலைத்தள பதிவை நீக்குங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை