பிரபல தயாரிப்பாளர் கொரோனா தொற்றால் பலி.. திரையுலகினர் அதிர்ச்சி...

Telugu producer Pokuri Rama Rao dies of Covid-19

by Chandru, Jul 5, 2020, 13:32 PM IST

திரையுலகை பொறுத்தவரை கொரோனா தொற்றால் பாலிவுட்டுக்குப் பிறகு டோலிவுட் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. நடிகர் கோபிசந்த் நடித்த ரணம், ஆண்டரி, யக்னம் உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தனது சகோதரர் பொகுரி பாபுராவுடன் இணைந்து தயாரித்தவர் பொகுரி ராமராவ். ஐதராபாத்தில் வசிக்கும் இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 65. இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தான் பொகுரி ராமராவ் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தமிழ், தெலுங்கு டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகை நவ்யா சாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து கொண்டார். அதேபோல் தயாரிப்பாளர் பந்தாலா கணேஷ், நடிகை சமந்தாவின் தோழியும் டிசைனருமான ஷில்பா ரெட்டி அவரது கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது தெலுங்கு டிவி நடிகர் ரவி என்பவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கிறார். டோலிவுட் திரையுலகில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

You'r reading பிரபல தயாரிப்பாளர் கொரோனா தொற்றால் பலி.. திரையுலகினர் அதிர்ச்சி... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை