நடிகர் ஆர்யா பட தயாரிப்பாளர் அதிர்ச்சி.. 300 கோடி ரூபாய்‌ மோசடியா?

by Chandru, Jul 24, 2020, 20:16 PM IST

நடிகர் ஆர்யா நடித்த மகாமுனி படத்தைத் தயாரித்த கே.ஈ.ஞானவேல்ராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ்‌ தாக்கத்தால்‌ பொது மக்களும்‌, திரைத்துறையினரும்‌ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் என்னைப் பற்றி அவதூறாக வரும் செய்திகளில்‌ எள்‌ முனையளவும்‌ உண்மையில்லை என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்‌.தமிழ்த்‌ திரையுலகிற்குத் தேசிய விருது உட்படப் பல விருதுகளையும்‌, பல திறமையான நடிகர்களையும்‌, தந்துள்ள எனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட மகாமுனி (ஆர்யா நடித்தது) திரைப்படம்‌ 2019-ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 06-ம்‌ தேதி ரிலீஸ்‌ ஆனது.

நீதிமணி என்பவர்‌ 2019-மே மாதம்‌ என்னை அணுகி 'மகாமுனி: திரைப்படத்தின்‌ தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும்‌ என்று கோரினார்‌. அவ்வகையில்‌ 2019-மே 27ம்‌ தேதி:ரூ.6,25,00,000 (ஆறுகோடியே இருபத்தைந்து இலட்சம்‌ ரூபாய்‌) தொகைக்கு நீதிமணியின்‌ தருண் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மகாமுனி திரைப்படத்‌துக்கு முறையான ஒப்பந்தம் போடப்பட்டது. நீதிமணி‌ பகுதி தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது இலட்சம்‌ மட்டுமே) செலுத்தினார்‌. மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன்னுற்று ஐந்து இலட்சம்‌) தொகையை பிறகு தருவதாகச் சொன்னவர்‌ இன்று வரை தராமல்‌ என்னை ஏமாற்றிவிட்டார்‌. மீதமுள்ள தொகையைத் தரவேண்டி நீதிமணி மீது சினிமா துறையின்‌ சட்ட திட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌ நீதிமணியும்‌ அவரின்‌ கூட்டாளிகளும்‌ ரூ.3,00,00,000 மூன்று கோடி மோசடி செய்துவிட்டதாகத் துளசி மணிகண்டன்‌ என்பவர்‌ ஒரு புகார்‌ அளித்துள்ளார்‌. என்‌ மீதோ, ஸ்டூடியோ கிரீன்‌ நிறுவனம்‌ மீதோ எவ்வித புகாரும்‌ அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம்‌ செய்யும்‌போது அதைச் சட்டப்படியான வியாபாரத்தை மட்டுமே பேச முடியும்‌. அவ்வகையில்‌ "மகாமுனி: திரைப்படத்தை சட்டப்படியாக; முறையாக விற்பனை செய்ததைத்‌ தவிர எனக்கும்‌ நீதிமணிக்கும்‌ எவ்வித தொடர்பும்‌ இல்லை. நீதிமணி‌ மீது துளசி மணிகண்டன்‌ அளித்துள்ள புகாரில்‌ எவ்வித முகாந்திரமும்‌ இல்லாமல்‌ என்னையும்‌, ஸ்டுடியோ கிரீன்‌ நிறுவனத்தையும்‌ இணைத்து, என்‌ புகைப்படத்தையும்‌ பயன்படுத்தி நான்‌ நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி 300-கோடி ரூபாய்‌ மோசடி என என்னிடம்‌ எவ்வித விளக்கமும்‌ கேட்காமல்‌; தன்னிச்சையாகவும்‌, தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும்‌ வகையிலும்‌ வெளியிடப்பட்டுள்ள‌ செய்திகளைப்‌ பார்த்து நானும்‌, என்‌ குடும்பத்தினரும்‌. மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளோம்‌.

இது போன்ற செய்திகள்‌ திரைத்துறையில்‌ நான் சம்பாதித்து வைத்திருக்கும்‌ நற்பெயருக்கு ஊறு விளைப்பதோடு எனது எதிர்கால வியாபாரத்திலும்‌ எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்‌. ஆபத்துகள்‌ உள்ளன. எனவே, இதுபோன்ற செய்திகளை என்‌ அனுமதி பெறாமலும்‌, உண்மைக்குப்‌ புறம்பாகவும்‌ யாரும்‌ வெளியிட வேண்டாம்‌ எனத் தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ இதுபோன்ற செய்திகள்‌ வெளியிடுவது தொடர்ந்தால்‌ அந்த செய்தியை வெளியிடுவோர்‌ மீது சிவில்‌ மற்றும்‌ கிரிமினல்‌ வழக்கு தொடர்வதோடுமான நஷ்ட ஈடு வழக்கும்‌. தொடரப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு கே.ஈ.ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார்.


Leave a reply

Speed News

 • பெங்களூரு கலவரத்தில் இது வரை 206 பேர் கைது

   

  பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினர் நவீன் என்பவர் பேஸ்புக்கில் போட்ட பதிவால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலவரம் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்டது. 

  இந்த கலவரம் தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் கலீம் பாஷா உள்பட  இது வரை 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாடீல் தெரிவித்துள்ளார். 

  Aug 14, 2020, 10:15 AM IST

 • ஜெயலலிதா நினைவு இல்ல வழக்கு.. ஆக.12ம் தேதி விசாரணை

  ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகள் தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.

  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயித்து நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

  இதை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கு, தீபக் தொடர்ந்த வழக்குகள் வரும் 12ம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. 

  Aug 10, 2020, 14:48 PM IST

 • பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா..

  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தான் வேறொரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது கோவிட்19 சோதனை செய்ததாகவும், அதில் தொற்று உறுதியானதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொண்டிருக்கிறார். 

  Aug 10, 2020, 14:41 PM IST

 • குஜராத்தி்ல் முகக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம்..

  குஜராத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகக்கவசம் அணியாவிட்டால், ஆயிரம் ரூபா்ய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. நாளை முதல் இது அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். 

  Aug 10, 2020, 14:33 PM IST

 • ராஜஸ்தானி்ல் நாளை மாலை பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..

  ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்கள் திரும்பியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 14ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சி பாஜக ஆகியவை தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் அடைத்து வைத்திருக்கின்றன.

  இந்நிலையில், நாளை(ஆக.11) மாலை 4 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசுக்கு ஆதரவாக மாறலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. 

  Aug 10, 2020, 14:31 PM IST

More Cinema News