ஒடிடியில் கையில் சூலாயுதத்துடன் உலா வரப்போகும் நயன்தாரா..

Nayanthara Mookkuththi Amman On OTT?

by Chandru, Aug 30, 2020, 18:36 PM IST

இன்னும் எவ்வளவு நாள் பொறுப்பது என்ற நிலைக்கு வந்திருக்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள். பிரபல நட்சத்திரங்களின் படங்களுக்கு சில ஒடிடி நிறுவனங்கள் குறி வைத்துக் காய் நகர்த்தி வருகிறது. அதில் அமேசான் பிரைம் சரியாக கோலடித்துக் கொண்டிருக்கிறது ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் வெளியானது. அதன்பிறகு பல படங்கள் ஒடிடிக்கு வரிசை கட்டி நிற்கிறது. ஆனால் சிறு படங்களை ஒடிடி தளங்கள் கண்டு கொள்வதில்லை.

சமீபத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று ஒடிடிக்கு வந்திருக்கிறது. தற்போது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஒடிடி நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது. அம்மன் வேடத்தில் விரதம் இருந்து சூலத்தைக் கையில் ஏந்தி இப்படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். ஆர்ஜே,பாலாஜி படத்தை இயக்கி உள்ளார்.கமர்ஷியல், திகில் என ஒடிடி தளத்தில் நயன்தாரா படங்கள் உலவிக்கொண்டிருக்கும் நிலையில் மூக்குத்தி அம்மன் மூலம் கையில் சூலாயுதத்துடன் ஒடிடி தளத்திற்கு வெகு சீக்கிரமே வந்துவிடுவார் அதற்கான பேச்சு வார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.

You'r reading ஒடிடியில் கையில் சூலாயுதத்துடன் உலா வரப்போகும் நயன்தாரா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை