ராஜ சிம்மாசனத்தில் தல அஜீத் வாழ்நாள் நடிப்பை பேசும் படம்.. வைரல் வீடியோ..!

Thala Ajith hindi Movie Asoka video viral

by Chandru, Sep 3, 2020, 19:45 PM IST

கொரோனா ஊரடங்கு திரையுலகை மட்டுமல்லாது திரையுலக ரசிகர்களின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டது. தங்களுக்கு பிடித்தமா ஹீரோக்களை ஆங்காங்கே சந்தித்து மகிழ்ச்சி அடைந் தவர்கள் கடந்த 5 மாதமாக கட்டிப் போட்டதுபோல் முடங்கி உள்ளனர். விஜய், அஜீத் போன்றவர்களின் பழைய படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைகின்றனர்.


தற்போது இணையத்தில் தல அஜீத் வீடியோ ஒன்று வைரலாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இது தல ரசிகர்களை வெறித்தனத்தில் ஆழ்த்தி யுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் 2008 இல் வெளி யான 'அசோகா' படத்தில் தல அஜித்தின் வீடியோவை வெளியிட் டுள்ளது. ஷாருக் நடித்த அசோகா படத்தில் அவரது சகோதரனாக அஜீத் நடித்திருக் கிறார். இப்படத்தில் அவருக்கு திரை நேரம் மிகக் குறைவாக இருந்தாலும், இது அவரது வாழ்நாள் முழுமைக்கும் பேசும் மிகச்சிறந்த நடிப்புகளில் ஒன்றாகும். அசோகா படம் வெளியான நேரத்தில் அப்படத்தில் நடித்த மற்ற எந்த நடிகரையும் விட அஜீத் ஆதிக்கம் செலுத்தினார் என்று விமர்சகர்கள் குறிப் பிட்டுள்ளனர்.


அஜீத்தின் அசோகா வீடியோ இணையளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் நடிக்க எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை ஐம்பது சதவீததம் முடிந் துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத் தில் நிலைமை மேலும் சீரானவுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.

You'r reading ராஜ சிம்மாசனத்தில் தல அஜீத் வாழ்நாள் நடிப்பை பேசும் படம்.. வைரல் வீடியோ..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை