பெங்களூருவில் கன்னட டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே அறையில் இருவரும் அடைக்கப்பட்டதால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சமாதானம் செய்ய வந்த பெண் காவலரை இருவரும் விரட்டி அடித்தனர்.
போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நடிகைகள் இருவரும் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இருவரையும் போலீஸார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் . மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் விசாரணையை வரும் 24ம் தேதி வரை தள்ளிவைத்தனர். இதையடுத்து நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கால்ரானி ஆகியோர் செப்டம்பர் 24 வரை மத்தியச் சிறையில் இருப்பார்கள்.
சிறையில் நடிகைகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் இரண்டு நடிகைகளும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சஞ்சனா கைதி எண் 6833 ஆகவும், ராகினி திவேதி கைதி எண் 6604 வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராகினியை மத்திய குற்றப் பிரிவு செப்டம்பர் 4 ஆம் தேதியும், சஞ்சனா செப்டம்பர் 8 ஆம் தேதியும் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு, ராகினி மற்றும் சஞ்சனா ஆகியோர் பெங்களூரில் உள்ள கே.சி பொது மருத்துவமனைக்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் மயிர்க்கால்கள் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராகினி திவேதி சிறுநீரில் தண்ணீரில் கலந்து தனது சிறுநீர் மாதிரியை வெப்பநிலை குறைக்கும் தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டார். ஆனாலும் அதை மருத்துவ பரிசோதனையாளர்களும் காவல்துறையும் விரைவாகக் கண்டு பிடித்தனர். அவரிடமிருந்து புதிதாக மாதிரி பெறப்பட்டது.
சஞ்சனா கல்ரானி மருத்துவமனையில் ஒரு முரட்டுத்தனத்தைச் செயல்பட்டு எனக்கு சட்டப்படி சிறுநீர் மாதிரி சோதனையை மறுக்க உரிமை உள்ளது என்றதுடன் போதைப்பொருள் மோசடி வழக்கில் காவல்துறையினர் தன்னை பலிகாடாவாக்குகிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். பின்னர் அவர் மயிர்கால் பரிசோதனைக்கு மாதிரிகளைத் தந்தார்.