விவசாயிகளை தீவிரவாதி என்ற பிரபல நடிகை மீது வழக்கு..

Police case booked against kangana ranuat

by Chandru, Oct 12, 2020, 16:08 PM IST

நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட்டில் போதைப் பொருள் உபயோகம் இருக்கிறது, அங்கு நடக்கும் பிரபலங்களின் பார்டிகளில் இலவசமாகப் போதை மருந்து தரப்படுவதாகக் கூறினார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பாலிவுட் வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்றதுடன், மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் போல் உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேனா பற்றி கடுமையாகத் தாக்கி பேசினார்.

இதையடுத்து கங்கனாவுக்கு எதிர்ப்பு கிளம்பியது மும்பை வந்தால் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்று சிவசேனா தொண்டர்கள் அறிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசிடம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கமாண்டோ படை பாதுகாப்பு பெற்றார். அவர்களின் பாதுகாப்பு வளையத்தில் தற்போது கங்கனா இருக்கிறார்.

இதற்கிடையில் கங்கனாவின் மும்பை பங்களாவில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டிருப்பதாக கூறி அதை அதிகாரிகள் இடித்தனர். மேலும் கங்கனா போதை மருந்து பயன்படுத்தியாக வந்த வீடியோவின் அடிப்படையில் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடந்த முடிவு செய்தனர், இதையடுத்து கங்கனா மும்பையிலிருந்து சொந்த ஊரான மனாலிக்கு சென்றார்.ஊரடங்கு தளர்வில் படப் பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மனாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தார் கங்கனா. ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தின் படப்பிடிப்பில் கங்கனா கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பு ஷெட்யூலும் முடிந்தது. சட்டசபை கூட்டத்தில் கங்கனா பங்கேற்றது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் ஏஎல் விஜய் இதனைப் படமாக்கினார். அப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.

ஏற்கனவே பாலிவுட் ஸ்டார்களுடன் மோதல், சிவசேனா கட்சியுடன் மோதல் என்ற நிலையில் தற்போது விவசாயிகளை தீவிரவாதி என்று கருத்துச் சொன்னதாக கங்கனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் மத்திய பா ஜ அரசு வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு கிளம்பியது. நடிகை கங்கனா இது தொடர்பாக வெளியிட்ட டிவிட்டர் மெசேஜில், குடியுரிமை சட்டம் நிறைவேற்றிய போது அதற்கு எதிராக வதந்தியைக் கிளப்பியவர்கள் தற்போது வேளாண் சட்டத்துக்கு எதிராக வதந்தி கிளப்புகிறார்கள். அவர்கள் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கங்கனா விவசாயிகளைத் தீவிர வாதிகள் எனக் குறிப்பிட்டிருப்பதாக அவர் மீது கர்நாடகாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர் இது தொடர்பாக தும்கூரு மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில். கங்கனா ரனாவத் விவசாயிகள் மனம் புண்படும்படியும், வன்முறை தூண்டும்படியும் கருத்து வெளியிட்டிருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதை ஏற்று கங்கனா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து கியாதசந்திரா காவல் நிலையத்தில் கங்கனா மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.

You'r reading விவசாயிகளை தீவிரவாதி என்ற பிரபல நடிகை மீது வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை