விஜய் சேதுபதி விலகிய மற்றொரு பிரபல படம்..

by Chandru, Dec 10, 2020, 16:29 PM IST

நடிகர் விஜய் சேதுபதி தமிழில் அதிகம் டிமாண்ட் உள்ள நடிகர். ஹீரோவாக நடிப்பதுடன் ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் இன்னும், திரைக்கு வரவில்லை. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். அதே போல் இந்தியில் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி.

இப்படத்துக்கு லாக் டவுனுக்கு முன்பு கால்ஷீட் கொடுத்திருந்தார். அமீர்கான் தனது படங்களை நேர்த்தியாக உருவாகுவதில் அதிக கவனம் செலுத்துவார். இப்படத்தில் விஜய் சேதுபதி தனது கதாபாத்திரத்துக்காகச் சற்று உடல் இளைத்து நடிக்க வேண்டும். ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது.ஊரடங்கிற்கு முன்பு விஜய் சேதுபதி கொடுத்த கால்ஷீட் பயன்படுத்த முடியாத நிலையில் அமீர்கான் இருந்தார்.

ஆனால் தற்போது வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் மீண்டும் அமீர்கான் படத்துக்கு கால் ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் விஜய் சேதுபதி இருக்கிறாராம். மேலும் உடல் எடை குறைக்கவும் இயலாத சூழல் ஏற்பட்டுள்ளாதால் அமீர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி இருப்பதாகத் தெரிகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு விளக்கங்கள் அளித்தும் எதிர்ப்பு குறையவில்லை. இதையடுத்து தனது படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதியிடம் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று நன்றி வணக்கம் சொல்லி அதிலிருந்து விலகினார். விஜய் சேதுபதி தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் படத்திலும் மற்றும் துக்ளக் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.

You'r reading விஜய் சேதுபதி விலகிய மற்றொரு பிரபல படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை