ஹீரோவை வாழ்த்த ஐதராபாத் வந்த கே ஜி எஃப் ஸ்டார்.. நெட்டில் வைரலாக பரவும் படம்..

Advertisement

பாகுபலி படத்துக்குப் பிறகு ஆக்‌ஷன் படமாக சஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது. கே ஜி எஃப் போல் ஆக்‌ஷன் அதிரடி படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர். ரசிகர்களின் எண்ணத்தை உடனே நிறை வேற்ற எண்ணிய பிரபாஸ் உடனடியாக கேஜிஎஃப் பட இயக்குனருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தார்.

இப்படத்தை விரைவாக நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளார். இப்படத்துக்குச் சலார் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் இப்படத்தின் படம் பூஜை இன்று ஐதராபாத்தில் நடந்தது. பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நண்பரான யஷ் இப்பட பூஜையில் பங்கேற்க கர்நாடகாவிலிருந்து வந்திருந்தார். அவரை பிரபாஸ் வரவேற்றார். இருவரும் அருகருகே நிற்கும் புகைப்படத்தைப் போட்டிப் போட்டு படம் எடுத்தனர். அப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ஒரு வன்முறை மிகுந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. சலார் படக் குழுவினர் கலந்து கொள்ளப் படப் பூஜை ஹைதராபாத்தில் நடை பெற்றது. பிரபாஸ் வெள்ளை நிற குர்தா அணிந்து கலந்து கொண்டார், யஷ் நீஸ் நிற டி ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார்.

கே ஜி எஃப் 2 படத்துக்கு அமைத்தது போன்ற வித்தியா சமான அரங்கை சலார் படத்துக்கு அமைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு பிரபாஸ் உடல் எடை கூடுவார் என்று கூறப் படுகிறது. இதுவரை ஸ்டைலாக அழகாகத் தோன்றி ஹீரோயிசம் செய்துக் கொண்டிருந்த பிரபாஸுக்கு இப்படத்தில் முரட்டுத்தன மான தோற்றத்தை வழங்கி இருக்கிறாராம் இயக்குனர். சீக்கிரமே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>