சூப்பர் ஸ்டார் படங்களுக்கு வழிகாட்டிய மாஸ்டர்.. இந்த ஆண்டில் பிரபல படங்கள் அணிவகுப்பு..

Advertisement

கொரோனா ஊரடங்கு காலத் தால் 8 மாதங்கள் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. புதிய படங்கள் மாஸ்டர், சூரரைப்போற்று, ஜெகமே தந்திரம் என பல படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தும் ரிலீஸ் செய்ய முடியாத நிலை நீடித்தது. இந்த சமயத்தை பயன்படுத்தி ஒடிடி தளங்கள் பெரிய படங்களை கைப்பற்றியது. இதில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், ஜெயம் ரவி நடித்த பூமி என பல படங்கள் ஒடிடியில் வெளி யானது. மாஸ்டர், ஜெகமே தந்திரம் படங்களையும் கைப் பற்ற ஒடிடி தங்கள் முடிவு செய்தன. ஆனால் இப்படங் கள் தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்களும். தியேட்டர் அதிபர்களும் கோரிக்கை வைத்ததையடுத்து அவைகள் ஒடிடியில் வெளியிடுவதை நிறுத்து வைத்தனர்.

தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்யப்பட்ட நிலை யில் திரை அரங்குகளை திறக்க அனுமதி கோரி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட் டது. ஆனால் கொரோனா வழிகாட்டுதல் கடைபிடிக்க வேண்டும், 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி என அரசு உத்தரவிட்டது. இதனால் மாஸ்டர் போன்ற சில பெரிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப் பட்டது. 100 சதவீத அனுமதிக்கு பிறகு படங்கள் வெளியாகும் என்று தெரிவிக் கப்பட்டது. பிறகு மீண்டும் தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத டிக்கெட்டு அனுமதி கேட்டனர். அதையேற்று அரசு 100 சதவீத டிக்கெட்டு அனுமதி அளித்தது. ஆனால் எதிர்ப்பு எழுந்ததால் மீண்டும் 50 சதவீத டிக்கெட் அனுமதி தான் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பொங்கலை யொட்டி விஜய் யின் மாஸ்டர் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. ரூ 200 கோடி வசூலை இப்படம் தாண்டியது. இது பிரபல நட்சத்திரங் களின் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படங்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. இதனால் ஒடிடிக்கு செல்ல விருந்த படங்களும் மீண்டும் தியேட்டர் ரிலீஸுக்கு திரும்பி உள்ளன. இந்த வருடம் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

இந்த ஆண்டில் வெளிவர விருக்கும் படங்கள் அணிவ குத்திருக்கின்றன. அதன் விவரம்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். குஷ்பு, நயன் தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை வரும் நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஜீத் நடிக்கும் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். ஹூமா குரோஷி ஹீரோயின்.
விக்ரம் நடித்த கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

கார்த்தி நடித்துள்ள சுல்தான். இப்படத்தை பாலாஜி கண்ணன் இயக்கி உள்ளார். இதில் ராஷ்மிகா ஹீரோயி னாக நடிக்கிறார்.

விஷால் நடிக்கும் சக்ரா. இப்படத்தை எம் எஸ். ஆனந்தன் இயக்குகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.
சிம்பு நடிக்கும் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்யாணி பிரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கிறார்.

தனுஷ் நடிக்கும் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயி னாக நடிக்கிறார். அதேபோல் தனுஷின் மற்றொரு படம் கர்ணன். இதை மாரி செல்வ ராஜ் இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான். ஆர்.ரவிகுமார் இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்குகிறார். இதில் ராசி கன்னா ஹீரோயின் யஷ் நடிக்கும் கே.ஜி.எப் 2. பிரசாந்த் நீல் டைரக்டு செய்கி றார். ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயின்.

ஜூனியர் என்.டி.ஆர். - ராம் சரண் - ஆர்ஆர்ஆர். இப்படத் தை எஸ்.எஸ்.ராஜமவுலி இயக் குகிறார். அலியாபட் ஹீரோ யின். விஷ்ணு விஷால், ராணா நடிக்கும் காடன். பிரபு சாலமன் இயக்குகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>