வலிமை பட அப்டேட் கேட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரிடம் லக லக..

Advertisement

அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை எச். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இத்திரைப் படத்தை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால் படதரப்பிலிருந்து பற்றி எந்தவிதமான அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். அதனால் அவர் அமைச்சர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு நெட்டில் மெசேஜ் பகிர்ந்தனர். சினிமா துறை சம்பந்தப்படாத வேறு சிலரிடமும் அப்டேட் கேட்டனர்.இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அஜீத் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில். பொது மக்களிடமும் மற்றவர்களிடமும் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியின்போது கலாட்டாவில் ஈடுபட்டனர். சென்னையில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. அப்போது இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் மொயீன் அலியை அழைத்த ரசிகர்கள் 'வலிமை அப்டேட்' கேட்டனர். அவர் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் திணறினார். ரசிகர்களின் இந்த வீடியோ நெட்டில் வைரலானது. ஆனால் தல அஜித்தின் திரைப்பட அப்டேட் கேட்டது மட்டுமல்ல வேறுவீரர்களிடமும் கேட்டிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.இந்திய கிரிக்கெட் வீரரும், ஆஃப்-ஸ்பின்னருமான ரவிச்சந்திரன் அஸ்வின், போட்டியின்போது எல்லைக் கோட்டில் நின்றிருந்தார் அவரை அழைத்து 'வலிமை' அப்டேட் கேட்டனர். அவரும் இதுபற்றி புரியாமலிருந்தார் பின்பு சுதாரித்துக்கொண்டு அஜீத் பட வலிமை அப்டேட் கேட்கிறார்கள் என்பது அறிந்து ஆச்சரியம் அடைந்தார்.

அண்மையில் தனது சொந்த யூடியூப் சேனல் நிகழ்ச்சியில், அஸ்வின் இந்த தகவலை வெளிப்படுத்தினார். இந்த சம்பவத்தை விவரித்த அஸ்வின், " கிரிக்கெட் விளையாட்டின்போது எனக்கு ஒரு அற்புதமான மற்றும் வேடிக்கையான தருணம் நிகழ்ந்தது. திரைப்படங்கள் மீது தமிழ்நாட்டில் மக்கள் எவ்வளவு பைத்தியம் மற்றும் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டாக அமைந்தது. நான் எல்லைக் கோடு பீல்டிங்கில் இருந்தபோது, ​​திடீரென்று சில ரசிகர்கள் 'தல அஷ்வின், அஸ்வின், என்று அழைத்தனர். திரும்பிப் பார்த்தபோது வலிமை அப்டேட்' என்று கத்தினார்கள்.இங்கிலாந்து வீரர் மொயீன் அலி என்னிடம் வந்து 'வலிமை என்றால் என்ன' என்று கேட்டார்.

அதே இடத்தில் மொயீன் அலி பீல்டிங் செய்யும்போது ரசிகர்கள் அவரிடம் 'வலிமை அப்டேட் கேட்டிருக்கின்றனர்.ரசிகர்களின் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட அஸ்வின் மேலும் கூறுகையில், "மாஸ்டர் படம் நன்றாக இருந்தது, ஆனால் இந்த 'வலிமை' அப்டேட்டை இங்கிலாந்து வீரரிடம் கேட்டுள்ளன. அதை என்னால் மறக்க முடியாது என்றார்.'வலிமை' படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, யோகி பாபு, அச்சியூத் குமார், புகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>