சர்கார் டீஸர் ரிலீஸ் தேதி தெரியுமா?

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நிறைவடைந்ததை தொடர்ந்து சர்கார் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலஷ்மி சரத்குமார் நடிக்கிறார். மேலும், ராதா ரவி, பழ. கருப்பையா போன்ற ஜாம்பவான்களும் உள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் திருவிழாவாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், விஜய் பேசிய பேச்சுக்கள், அரசியல் களத்தில், விவாத பொருளாகவே மாறியது.

விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும், கருத்து கூறி படத்தை ஹிட்டாக்க விரும்பவில்லை என்றும் அரசியல்வாதிகள் வரிந்து கட்டினர். இந்நிலையில், படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

வரும் ஆயுத பூஜை பண்டிகையன்று சர்கார் படத்தின் டீஸர் ரிலீசாகும் என்பதே அந்த தகவல். இதுவரை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தீபாவளிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அந்த தேதியை குறி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds