இன்றைய ( 06.10. 2018) ராசி பலன்கள்

by Vijayarevathy N, Oct 6, 2018, 08:14 AM IST

இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உறவினர்களுடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து வரும். வாகனம் வகையில் வீண் செலவு ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவுப் பெருகும். வரவு செலவு கணக்கில் கவனமாக இருக்கவும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து, கௌரவம் உயரும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்லவிதமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, பல புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரும் வாய்ப்பு கிட்டும். நட்பால் வகையில் ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். விருந்தினர் வருகை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புது வாய்ப்புகள் வரும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும். குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் சந்தோஷமான சூழல் நிலவும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும். விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். பெற்றோர்களின் அறிவுரை உதவியாக இருக்கும். உத்யோகத்தில் நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, மன தைரியம் கூடும். பழைய நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இழந்தது திரும்ப கிடைக்கும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். இக்கட்டான நேரத்தில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பணவிஷயத்தில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் பணிகளை விரைவாக செய்ய முடியும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவர். வாழ்க்கைத்துணை வழியில் நல்ல செய்தி உண்டு. தொழில், வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளவும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, வீண் சண்டை, சச்சரவை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் வகையில் மனஸ்தாபம் வரும். திருமண முயற்சி கைகூடும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

You'r reading இன்றைய ( 06.10. 2018) ராசி பலன்கள் Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை