2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை!

ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி  வரும் 2.0 படத்திற்கு எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.  ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும், எமிஜாக்சன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

தீபாவளியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த படக்குழு, கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில், படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை ரிலீஸாக உள்ளது.

ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதையடுத்து, 2.0 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு U/A சான்றிதழை பெற்றது.

நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸின் 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உள்ளிட்ட 12,567 இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தடை தொடர்பாக லைகா நிறுவனம் கூறுகையில், நீதிமன்றம் தடை விதித்தாலும் தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியில் எழுத்துக்களை மாற்றம் செய்து புதிய படங்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds