உலகக் கோப்பை ஹாக்கி இந்தியாவிடம் தென்ஆப்ரிக்கா படுதோல்வி

india beat south africa in world cup hockey

Nov 28, 2018, 20:45 PM IST

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணியை 5 கோல்கள் அடிதது இந்தியா விரட்டியடித்தது.

ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி

14-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் புவனேஷ்வரத்தில் இன்று தொடங்கியது. பலமான இந்திய அணி தென்ஆப்ரிக்க அணியை எதிர்கொண்டது. 10 - வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத்தின் ட்ராக் ஃப்ளீக் தென்ஆப்ரிக்க கோல் கீப்பரால் தடுக்கப்பட்டு ரீபவுண்ட் ஆகி மற்றோரு இந்திய வீரரான மந்திப் சிங் வசம் சிக்கியது. அவர் அதை எளிதாக கோலுக்குள் அடித்தார்.

அடுத்த 3-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை  அக்ஷாதீப் அடித்தார். அடுத்ததாக 43-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் அடுத்த கோலை திணித்தார். இந்தியா 3 கோல்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து லலித் உபாத்யா, சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் மேலும் இரு கோல்கள் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 5 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் தென்ஆப்ரிக்கா படு தோல்வியடைந்தது. 

முன்னதாக நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. 

You'r reading உலகக் கோப்பை ஹாக்கி இந்தியாவிடம் தென்ஆப்ரிக்கா படுதோல்வி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை