கடலூர் மத்திய சிறையில் டிஐஜி ஜெயபாரதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறையில் உள்ள 20 பிளாக்குகளில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று வரும் சுமார் 800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளிடையே செல்போன், கஞ்சா புழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு அறையாக டிஐஜி ஜெயபாரதி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் சிறையில் கைதிகள் செல்போன்கள், போதைப்பொருள் வைத்திருக்கிறார்களா? என்ற கோணத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில், புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் டிவி, செல்போன் போன்ற பொருட்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.