நீரவ் மோடியை அடுத்து ரூ.3,695 கோடியுடன் வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்த தொழிலதிபர்?

தொழிலதிபர் நீரவ் மோடியைத் தொடர்ந்து, ரோடோமேக் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரி வங்களில் ரூ.3,695 கோடியை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Feb 19, 2018, 17:53 PM IST

தொழிலதிபர் நீரவ் மோடியைத் தொடர்ந்து, ரோடோமேக் நிறுவன தலைவர் விக்ரம் கோத்தாரி வங்கிகளில் ரூ.3,695 கோடியை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடியை மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகின்றது. சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் அவரைத் தற்போது தேடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரோடோமேக் பெண்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, 5 பொதுத்துறை வங்கிகளில் 3,695 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

கான்பூரில் உள்ள கோத்தாரியின் தலைமை அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டிருப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

விதிகளுக்கு புறம்பாக கோத்தாரிக்கு பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவை கடன் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னதாக அலகாபாத் வங்கியிடமிருந்து 352 கோடி ரூபாயும், யூனியன் வங்கியிடமிருந்து 485 கோடி ரூபாயும் பெற்றுள்ள கோத்தாரி, வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

நீரவ் மோடி விவகாரம் அடங்குவதற்குள் மற்றும் ஒரு தொழிலதிபர் வங்கிகளை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிபிஐ விக்ரம் கோத்தாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

You'r reading நீரவ் மோடியை அடுத்து ரூ.3,695 கோடியுடன் வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்த தொழிலதிபர்? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை