பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று(ஜன.29) பாஜகவில் சேர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் அந்த கட்சியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். முன்னாள் ராணுவத் தளபதிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் கட்சியில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று காலை டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் அருண்சிங் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். அவருடன் அவரது சகோதரி சந்திரான்ஷுவும் பாஜகவில் இணைந்தார்.
சாய்னா நேவால் சர்வதேச பேட்மின்டன் போட்டிகளில் விளையாடி, 24 டைட்டில்களை வென்றிருக்கிறார். கடைசியாக அவர் தாய்லாந்து மாஸ்டர் போட்டியில் விளையாடினார். ஹரியானா மாநிலத்தில் பிறந்தவரான சாய்னா, ஐதராபாத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் பாருபல்லி காஷ்யப்பை கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்தார்.
ஏற்கனவே கிரிக்கெட் வீரர் கவுதம்காம்பீர் மற்றும் விளையாட்டு வீரர்கள் யோகேஷ்வர் தத், பபிதா போகட் உள்பட பலர் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.