இந்தியாவில் இது வரை 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் 175க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் குணமடைந்தவர் தவிர தற்போது 2 லட்சத்து 25,327 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் உள்ளது. இவர்களில் 2 லட்சத்து 14,774 பேருக்குச் சாதாரண அளவில்தான் இந்த வைரஸ் நோய் பாதித்திருக்கிறது. 10,553 பேருக்கு நோய் வீரியம் அதிகமாகி, அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சூழலில், இந்தியாவில் இன்று(மார்ச்23) காலை வரை 415 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. இது வரை 18.383 பேருக்கு மாதிரி எடுத்துப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் இன்று காலை 68வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஆரம்பத்திலிருந்ததாகவும், அதன்பிறகு குணமடைந்ததாகவும் கூறப்பட்டது.