கூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது

by SAM ASIR, Nov 25, 2020, 20:17 PM IST

கூகுள் இணைய செயலி 2021 புத்தாண்டு ஜனவரி முதல் இயங்காது என்றும், கூகுள் பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது, கூகுள் பே செயலிக்கான கட்டணம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்திய பயனர்களிடமிருந்து கட்டணம் பெறப்படாது என்றும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு விளக்கமளித்துள்ளது.

பே.கூகுள்.காம் என்ற இணைய செயலி மூலம் பயனர்கள் பரிவர்த்தனை செய்து வருகிறார்கள். கூகுள் நிறுவனம் அதன் இணைய பக்கத்தில் பே.கூகுள்.காம் இணைய செயலி சேவையானது வரும் ஜனவரி முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவித்தது. பணம் அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் கூகுள் பே செயலியை பயன்படுத்துமாறு அது பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது. உடனடியாக பணத்தை மாற்றுவதற்கு கட்டணமும் வசூலிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய அறிவிப்பு குறித்து கூகுள் இந்தியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. "இந்த கட்டணங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் கூகுள் பே அல்லது கூகுள் பே ஃபார் பிசினஸ் செயலிகளுக்கு இக்கட்டணம் பொருந்தாது," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading கூகுள் பே: இந்தியாவில் கட்டணம் கிடையாது Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை