என்னையும் அவர்கள் வன்புணர்வு செய்யக்கூடும் அல்லது கொல்லக் கூடும் என்று சிறுமி ஆசிஃபா பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் தீபிகா சிங் ரஜாவத் அச்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 10, 2018 அன்று எட்டு வயது ஆசிஃபா பானு, ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17, 2018 அன்று கிடைத்தது.
அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.
இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் காவல் அதிகாரி ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆசிபா வல்லுறவு கொலை வழக்கை எடுத்து நடத்துவதற்காக வழக்கறிஞர் தீபிகா சிங் ரஜாவத்திற்கு கொடும் மிரட்டல்கள் வந்துள்ளன
இது குறித்து மேலும் கூறியுள்ள அவர், ”என்னை அவர்கள் வன்புணர்வு செய்யக்கூடும் அல்லது கொல்லக் கூடும். என்னை இந்து விரோதி என்று முத்திரை குத்தி சமூக பகிஷ்காரம் செய்கிறார்கள். என்னை வக்கீல் தொழில் செய்யவிட மாட்டார்கள். ஏற்கெனவே என்னை தனிமைப்படுத்தி விட்டார்கள். எப்படி வாழப் போகிறேன் என்று தெரிய
வில்லை.
உச்சநீதிமன்றத்தை அணுகி போலிஸ் பாதுகாப்பு கேட்கப்போகிறேன். ஆனாலும் ஆசிபாவிற்கு நீதி கேட்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.