ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். விராட் இந்துஸ்தான் சங்க நிகழ்ச்சியில், இந்தியா - இலங்கை உறவு குறித்து பேசவுள்ள ராஜபக்சே, பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி விமானநிலையம் வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சுப்பிரமணியன் சுவாமி வரவேற்று அழைத்து சென்றார். அப்போது செய்தியாளர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ராஜபக்சேவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராஜபக்சே, “இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் அவர்களை தண்டித்தோம். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் கருத்து செல்ல விரும்பவில்லை” என்றார்.