திருமணத்திற்கு முன் என்ன பண்ணலாம்...!

திருமணத்திற்கு முன் இதையெல்லாம் பண்ணலாம்

Sep 10, 2018, 22:00 PM IST

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிருனு நம்ம முன்னோர்கள் சொல்லுவாங்க, அதனால் தானோ என்னமோ அத்திருமணத்தை இருவீட்டாரும் சேர்ந்து மிகவும் சிறப்பாக செய்கிறார்கள். இப்படி இருக்க அழகுக்கு இலக்கணமாக இருக்கும் பெண், திருமணத்திற்கு முன் தன்னை எவ்வாறு அழகேற்றலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

அழகாகவும், மிடுக்காகவும் இருக்க ஈஸியான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை என அரைமணி நேரம் நடந்து பாருங்க. இது உங்க இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

உடற்பயிற்சி செய்த பின் அதிகமா பசி எடுக்கும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவோடு சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களையாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.

முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்து கொள்ளுங்கள். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.

திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல் அதோடு தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம்.

தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம்.

தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் உங்கள் அழகைக் கூட்டும்.

நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பல வகையான டிசைன்கள் உள்ளன.

மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

இந்த டிப்ஸ்கள் கண்டிபாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும்னு நினைக்கிறேன். அட ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை