தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி...?

தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சியா?

Sep 11, 2018, 23:07 PM IST

தெலங்கானாவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி வலியுறுத்தியுள்ளன.

Telangana

தெலங்கானா அரசின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 8 மாதங்கள் உள்ளது. ஆனால், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆட்சியைக் கலைப்பதற்கு ஆளுநர் நரசிம்மனிடம் பரிந்துரை செய்தார்.

சந்திரசேகர ராவின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

தெலங்கானாவில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என சந்திரசேகர் ராவ் நம்பிக்கையுடன் உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில், பாஜகவிடம் இருந்து பிரிந்த தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இன்று மாலை ஆளுநரை சந்தித்து பேசினார்கள்.

அப்போது, "சட்டசபையை கலைக்க வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக தொடர்ந்தால் உண்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைபெறாது."

"முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம்" என அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி...? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை